யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் கல்லூரியின் மீள் நிர்மானப் பணிகள் முன்னெடுப்பு முள்ளிநியூஸ்

யாழ்ப்பாணம் கதீஜா பெண்கள் கல்லூரியின் மீள் நிர்மானப் பணிகள் முன்னெடுப்பு


யாழ்ப்பாணம் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதமாக பல தரப்பட்டவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கதீஜா பெண்கள் கல்லூரியின் மீள் நிர்மானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் முதற்கட்டமாக மூன்று ஆசிரிய விடுதிகளும் மலசலகூட வசதிகளும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன.

அத்துடன் பிரதான கட்டிடத்திற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான துரித முயற்சிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் மேற்கொண்டு வருகின்றார்.

யாழ் மாவட்டத்தில் முஸ்லீம்கள் கடந்த காலங்களில் தமது கல்வி நடவடிக்கைக்காக ஒஸ்மானியா கல்லூரி மற்றும் கதீஜா பெண்கள் கல்லூரியை பயன்படுத்தி வந்தனர்.

இவ்விரு பாடசாலைகளும் கடந்த கால யுத்தங்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் 2003 பின்னர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி முதலில் புனரமைப்பு செய்யப்பட்டதோடு தற்போது செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முஸ்லீம் மக்களின் ஒரே ஒரு பெண் பாடசாலையான இப்பாடசாலையும் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW