புதிய யாப்பு இலகுவான காரியமில்லை: ஜி.எல் முள்ளிநியூஸ்

புதிய யாப்பு இலகுவான காரியமில்லை: ஜி.எல்



புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவது அரசாங்கம் நினைத்தது போன்று இலகுவான காரியமில்லையெனவும் அதை இப்பொழுது அரசாங்கம் உணர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஜி.எல். பீரிஸ்.

அதனை மறைக்கவே அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் என்ற பெயரில் புதிய சட்டமூலம் ஒன்றை அரசு உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், புதிய சட்டமூலத்தின் ஊடாக ஒரே அமைச்சின் கீழ் பல அமைச்சுக்களை நிர்வகிக்கும் அதிகாரம் உருவாக்கப்படும் எனவும் சில அமைச்சர்கள் பதவியிழக்க நேரிடும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்குக் கூட்டு எதிர்க்கட்சி வலுவான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW