சம்பிக்க – கம்மன்பில – விமல் – ஞானசார ஒரே மேடையில்.. முள்ளிநியூஸ்

சம்பிக்க – கம்மன்பில – விமல் – ஞானசார ஒரே மேடையில்..


13ம் திருத்தச் சட்டத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராக பொது பல சேனாவின் தாய் அமைப்பான ஹெல உறுமய, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஞானசாரவை ஒரே மேடையில் இணைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக பொது பல சேனா தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 30ம் திகதி இது தொடர்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலான கூட்டம் ஒன்றை ஒழுங்க செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறும் அதேவேளை குறித்த சட்டமூலம் பிரிவினைவாதத்தை உருவாக்கும் எனும் அடிப்படையில் தாம் எதிர்க்க விளைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஹெல உறுமயவிலிருந்து பிரிந்து சென்ற உதய கம்மன்பில புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ள அதேவேளை அரசியல் பிணக்குகளை மறந்து அனைவரையும் ஒன்று சேர்க்கும் பணி இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW