சீனாவுக்கு 15,000 ஏக்கர்; நாடு தாங்காது என்கிறார் மஹிந்த!
தமது நிர்வாகத்தின் கீழ் 10 வருடங்களுக்குள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை இலாபமீட்டும் பொருளாதார மையமாக உருவாக்கவே தாம் திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதைய அரசின் திட்டங்கள் பாரதூரமானவையெனவும் தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கொழும்பு துறைமுகத்தில் பெறப்படும் மேலதிக வருமானத்தைக் கொண்டு ஹம்பாந்தோட்டை கடனை அடைப்பதற்கான திட்டமிடலும் இருந்தததாகவும் தெரிவித்துள்ள அவர் 15,000 ஏக்கரில் தொழிற்சாலை வலயம் அமைப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலதிக சுமையையே தரும் எனவும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எழுத்து மூலமாக இவ்விடயத்தை எதிர்ப்பாராக இருந்தால் வேறு இடத்திற்கு அதனை மாற்றிக் கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது