2017 பல்கலைக்கழக அனுமதி: நாளை முதல் விண்ணப்பங்கள் முள்ளிநியூஸ்

2017 பல்கலைக்கழக அனுமதி: நாளை முதல் விண்ணப்பங்கள்


2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் இணையத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பப்பத்திரங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமை தொடக்கம் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கையேட்டை பெற முடியும். அத்தோடு ஆணைக்குழு அங்கீகரித்த விநியோக முகவர்களிடமிருந்து கையேட்டைப் வாங்கலாம். மேலதிக விபரங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW