டொனால்ட் ட்ரம்ப் இன் முஸ்லிம் தடையை அடுத்து அமெரிக்காவில் பள்ளிவாசல் எரிக்கபட்டது. (படங்கள்) முள்ளிநியூஸ்

டொனால்ட் ட்ரம்ப் இன் முஸ்லிம் தடையை அடுத்து அமெரிக்காவில் பள்ளிவாசல் எரிக்கபட்டது. (படங்கள்)


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 7 முஸ்லிம் நாடுகள் மீது வீசா தடை விதித்து சில மணிநேரங்களில் ( இலங்கை நேரப்படி சனிக்கினழமை அதிகாலை) அமெரிக்காவின் Texas மானில விக்டோரியாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது!

முஸ்லிம் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் டொனால்ட் றம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று சுமார் ஒரு வாரத்திற்குள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் எரிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் இப்பள்ளிவாயல் ( இஸ்லாமிய நிலையம்) எரிக்கப்பட்டதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தீயணைப்பு படையினர் வருகை தரும்போது பள்ளிவாயல் முற்றுமுழுதாக அறிந்த நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதனை மறுபடியும் நிர்மாணிக்க உடனடி நிதிசேகரிப்பு ஒன்று இடம்பெற்றதில் 12 மணித்தியாலங்களில் உடனடியாக ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW