ரஷ்ய பெண் மீது பாலியல் சேட்டை புரிந்த பொலிஸார் கைது முள்ளிநியூஸ்

ரஷ்ய பெண் மீது பாலியல் சேட்டை புரிந்த பொலிஸார் கைது



வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ரஷ்ய பெண், கரையோரத்தில் உயிர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் சாரதி எனவும் மற்றையவர் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

27 மற்றும் 47 வயதுகளை உடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கந்தளாய் மற்றும் மிரிஹான பகுதிளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW