யாழில் கரட் அறுவடை ஆரம்பம் முள்ளிநியூஸ்

யாழில் கரட் அறுவடை ஆரம்பம்


யாழ். வலிகாமம் கிழக்கில் கரட் பயிர் செய்கை அறுவடையில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஏழாலை, குப்பிளான், புன்னாலைக் கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுன்னாகம், ஊரெழு, உரும்பிராய், அச்செழு, இணுவில், கோண்டாவில், நீர்வேலி, இருபாலை, சிறுப்பிட்டி, கோப்பாய் ஆகிய இடங்களில் மரக்கறி பயிர்ச்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்விடங்களில் கரட் பயிர் செய்கையை பல நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ளதை காண முடிந்தது.

அத்துடன் இம்முறை பருவ மழை உரிய காலப் பகுதியில் கிடைக்காமையினால் விவசாய நடவடிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW