திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காது சோதிக்கும் கருவி அன்பளிப்பாக வழங்கப்பட்டது முள்ளிநியூஸ்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் காது சோதிக்கும் கருவி அன்பளிப்பாக வழங்கப்பட்டது


திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் காது சோதிக்கும் கருவி (Audio meter) நேற்று முமுன்தினம்   27-01-2017 வெள்ளிக்கிழமை  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு ச சிவசங்கர் -  திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர்  கலந்து கொண்டார். அவருடன் மற்ற ரோட்டரி கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள்.

 ரூபா 600,000 பெறுமதியான இந்த காது சோதிக்கும் கருவி (Audio meter)  கண்டி ரோட்டரி கழகத்தின் அனுசரணையுடன் காது மூக்கு தொண்டை விசேட வைத்திய நிபுணருக்கு  வழங்கப்பட்டது.

(இஹ்ஸானா- பரீத்)

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW