இலங்கை வானில் அடையாளம் தெரியாத, பறக்கும் மர்ம பொருள் முள்ளிநியூஸ்

இலங்கை வானில் அடையாளம் தெரியாத, பறக்கும் மர்ம பொருள்


இலங்கையின் வான் பரப்பில் அடையாளம் தெரியாத பறக்கும் மர்ம பொருள் ஒன்று தென்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் குறித்த மர்ம பொருளை நேற்றிரவு -21- அவதானிக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவமான குறித்த பொருள் ஒன்று கதிர் வீச்சு போன்று பிரகாசமான ஒளியுடன் சுற்றி வந்ததாக பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொலைக்காட்டி கொண்டு நோக்கும் போது பிரகாசமான, சதுர வடிவ பொருள் போன்று இருந்துள்ளது. இது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இரத்தினபரி,ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மேல் மாகாண வான்பரப்பிலும் குறித்த மர்மபொருள் தெளிவாக இரவு 7.15 அளவில் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW