பிரித்தானிய Stephen Timms MP உடன் இலங்கையின் சமகால நிலைமை தொடர்பில் ஒரு கலந்துரையாடல்
SLMDI UK ஐக்கிய இராச்சியத்தின் Hon. Stephen Timms MP உடன் இலங்கையின் சமகால நிலைமை தொடர்பில் சந்தித்து கலந்துரையாடியது.
SLMDI UK அமைப்பானது இலங்கையின் சமகால நிலைமை தொடர்பில் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியனின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்துள்ளது.அதன் முதல் கட்டமாக 17.01.2017 செவ்வாய்க்கிழமை இன்று பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் STEPHEN TIMMS MP உடன் சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் SLMDI UK இன் தலைவர் M L நஷீர் தலைமையில் அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் ஜாபீர் ஹமீட் அவர்கள் உரையாட்டும்போது க௫மள ஊற்று பல்லிவாயல் சுமார் 450 வ௫டங்கள் பழமைவாய்ந்தது இப்பல்லி கடந்த அரசாங்கத்தால் மூடப்பட்டது பல அரசியல்வாதிகள் தலையிட்டும் பயனலிக்க வில்லை இதில் வேடிக்கை என்னவென்றால் வெ௫ம் 150 மீட்டரே தூரம் உல்லன மக்கள் வாழும் பகுதி இந்த நல்லாசி காலத்திலும் இப்பலியை திரந்து விடவில்லை என்றால் என்ன ஜனநாயகம் மேலும் அவர் கூ௫கையில் புல்மோட்டை பகுதியில் 300 ஏக்கர் முஸ்லிம் மக்களின் காணியையும் நேவிப் படையினர் பிடித்துள்ளனர் உடனடியாக விடுவித்து த௫மா௫ம் கோரிக்கை விடுத்தார் MP யிடம் மற்றும் இலங்கையில் அண்மைக்காலமாக குறிப்பாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கு இனவாதிகளால் இடம்பெற்று வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்டீபன் டிம்ஸ் MP இடம் சுட்டிக்காட்டியதோடு இவ்வினவாத நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளையும் இது வரை மேட்கொள்ளவில்லை என்பதையும் எடுத்து கூறப்பட்டது.
இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஸ்டீபன் டிம்ஸ் MP இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சர்வதேச சமுகம் கண்காணித்து வருவதாகவும் அந்நிலமை மிகவும் கவலை தருவதாகவும் கூறிய அவர் இது தொடர்பில் தன்னால் மேட்கொள்ளக்கூடிய சகல அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்த அவர் பிரித்தானியாவில் இலங்கை முஸ்லிம்களின் நலனுக்காக SLMDI UK செய்ய இருக்கின்ற இராஜதந்திர அழுத்தங்கள் அனைத்துக்கும் தான் முழு ஆதரவையும் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் முஸ்லிம்களது பூர்வீக நிலங்களை இலங்கை அரசாங்கம் பல்வேறு காரணங்களை காட்டி சுவீகரித்து வருகின்ற விடயமும் ஸ்டீபன் டிமம்ஸ் MP இடம் சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக வில்பத்து விவகாரத்தில் முஸ்லிகளுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி தொடர்பில் பல்வேறு ஆதாரங்கள் கையளிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் மிக விரைவாக தான் பொதுநலவாய அலுவலத்தில் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பிரதிநிதிக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஸ்டீபன் ஸ்டிம்ஸ் MP தெரிவித்தார்.
இன்றய தினம் ஐக்கிய இராச்சிய பிரதமரின் BRI EXIT தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த உரை இடம்பெற்ற போதிலும் அதன் மத்தியில் இலங்கையின் முஸ்லிம்களது பிரச்சனைகளை நேரம் ஒதுக்கி கலந்துரையாடிய ஸ்டீபன் ஸ்டிம்ஸ் MPக்கு SLMDI UK
நன்றி - அனுப்புனர்:-
jabeer hameed