2026 வரை கடன் சுமை தொடரும்: ரணில்
கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள கடன் சுமையை நடைமுறை அரசே மீளச் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2026ம் ஆண்டு வரை இந்நிலை தொடரும் என தெரிவித்துள்ளார்.
அரநாயக்க மண் சரிவில் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர், இதனால் நாட்டின் அபிவிருத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.