ரொட்டவெவ புளியங்குளம் விவசாயக்காணிகளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை முள்ளிநியூஸ்

ரொட்டவெவ புளியங்குளம் விவசாயக்காணிகளை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை



திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட ரொட்டவெவ கிராம மக்கள் கடந்த யுத்தத்திற்கு முன்னர் விவசாயங்களை மேற்கொண்டு வந்த சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் ஆகிய விவசாயக்காணிகளை விவசாயத்தினை மேற்கொள்ளவிடாமல் தடுத்து வரும் வனப்பரிபாலன திணைக்களத்திடமிருந்து விவசாயத்தினை மேற்கொள்வதற்கு அனுமதியைப்பெற்றுத்தருமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த யுத்தத்திற்கு முன்னர் 20 வருடங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த இவ்விவசாயக்காணிகளை 1990ம் ஆண்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையிலும் மேற்கொண்டு வந்ததாகவும் அதனையடுத்து அரச முற்படையினரும் இந்த பகுதிகளுக்குச்செல்ல வேண்டாம் என தெரிவித்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாட்டின் அமைதியான சூழ் நிலை உருவாகியதையடுத்து ரொட்டவெவ விவசாய சங்கத்தினால் சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் ஆகிய இரு குளங்களையும் புணரமைத்து தருமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசினால் புணரமைப்பு செய்யப்பட்டது.

இக்குளங்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ்
கமநெகும. மகநெகும திட்டத்தின் கீழ் 60 இலச்சத்திற்கும் மேற்பட்ட தொகையில் இக்குளங்கள் புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் ரொட்டவெவ விவசாய சம்மேளனம் தெரிவிக்கின்றது.

அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்ட்டு மீள்குடியேறிய கிராமமான மிரிஸ்வெவ கிராமத்தில் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் ஊடாக சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் செல்லும் விவசாய வீதியென கூறி புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் அக்கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

விவசாய வீதி என பெயர் சூட்டப்பட்ட சின்ன புளியங்குளம் மற்றும் பெரிய புளியங்குளம் வீதியால் தற்போது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும்

தாம் வியர்வை சிந்தி பசி வயிற்றுடன் தண்ணீரையும் புளியம்பழத்தையும் சாப்பிட்டு விட்டு வரம்புகளை போட்டு விவசாயம் செய்து வந்த இந்த காணிகளை விவசாயத்தை செய்ய விடாது வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் அமைதி நிலவி வருகின்ற நிலையில் யாரிடமும் கையேந்த தேவையில்லை என நினைத்துக்கொண்டு அரசாங்கத்தினால் பணரமைப்பு செய்யப்பட்ட குளங்களுக்கு உட்பட்ட காணிகளை விவசாயம் செய்வதற்கு பொதுமக்கள் துப்பரவு செய்வதற்காக சென்ற போது வன பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ரொட்டவெவ சின்ன புளியங்குளம் பெரிய புளியங்குளம் விவசாயக்காணிகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளிடம் பல தடவைகள் தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் கிடைக்காத பட்ஷத்தில் நல்லாட்சி அரசு தாங்கள் சுயமாக விவசாயத்தை மேற்கொள்வதற்கு தாம் மேற்கொண்டு வந்த இவ்விவசாய காணிகளை வன பாதுபாதுகாப்பு அதிகாரிகளின் அடாவடியிலிருந்து பெற்றுத்தருமாறும் விவசாயமக்கள் நல்லாட்சி அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்துடன் ரொட்டவெவ கிராமத்தில் 400 குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் இந்நிலையில் இக்காணிகளை செய்ய விடாமல் தடுத்தமையை அடுத்து இக்கிராமமக்கள் தொழிலின்றி குடும்பங்களை விட்டு விட்டு கொழும்பு கண்டி போன்ற இடங்களுக்கு தொழில் தேடி சென்று வருவதாகவும் குடும்ப பெண்கள் பிள்ளைகளின் கல்வி கலாச்சாரம் மற்றும் மருத்துவத்தில் பின் விளைவுகளையும் மிகவும் கஷ்டங்களை தாம் எதிர் நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாம் இரத்தத்தினால் வியர்வை சிந்தி தங்கள் பிள்ளைகள் சிறப்பாக வாழ வேண்டும் என்ற நோக்குடன் இரவு பகல் பாராமல் பசி பட்டனியுடன் காத்து வந்த இந்த சின்ன புளியங்குளம் பெரிய புளியங்குளம் விவசாயக்காணிகளை விவசாயிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இம்முறையாவது விவசாயத்தினை மேற்கொள்ள அனுமதியைப்பெற்று இக்காணிகளை பகிர்தளிக்க வேண்டுமென விவசாயிகள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் எதிர்கட்சி தலைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



ABDUL SALAM YASEEM - TRINCO

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW