டெங்குவில் மூன்று நிலைகள் உள்ளன
முதல் நிலை:
டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
இரண்டாம் நிலை:
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மூன்றாம் நிலை:
இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.
ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், அவதானமாக இருந்தால்பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

நன்றி - MOH