திருகோணமலை மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் இடமாற்றம் முள்ளிநியூஸ்

திருகோணமலை மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் இடமாற்றம்


திருகோணமலை மாவட்டத்தில், நான்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக, கிண்ணியாவில் கடமையாற்றிய நகரசபை செயலாளர், தம்பலகமம் பிரதேச சபைக்கும் தம்பலகம் பிரதேச சபை செயலாளராகக் கடமையாற்றியவர், திருகோணமலை நகர சபைக்கும், கிண்ணியா பிரதேச சபைச் செயலாளர், கிண்ணியா நகர சபைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில், நிர்வாக உத்தியோகத்தராகக் கடமை புரிந்த எம்.ஜே.அஸ்வத்கான், கிண்ணியா பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, மேற்படி இடமாற்றங்களைச் செய்துள்ளது. 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW