ரவி கருணாநயக்கவின் சவாலுக்குத் தயார்: மஹிந்த

சர்ச்சைக்குள்ளாகியுள்ள 2015 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தனது பெயர் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் நிலையில் முடிந்தால் அவர் அதனை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டும் என நிதியமைச்சர் விடுத்த சவாலுக்குத் தாம் தயார் என தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
தனது பெயர் திட்டமிட்டே இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வரும் மஹிந்த வழக்கறிஞர்களிடம் ‘ஆலோசனை’ பெற்றுவருவதாகவும் விரைவில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.