அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை: பந்துல
இலங்கையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லையென தெரிவித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்ட விதிமுறைகளுக்கேற்ப அதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்பதால் உச்சகட்ட விற்பனை விலையை மாத்திரமே அரசாங்கத்தால் நிர்ணியிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர், அரிசி விலையைக் கட்டுப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு முதல் சம்பா மற்றும் நாட்டரிசி விலைக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.