(வீடியோ).,இது யாருடைய குற்றம்.? இதற்கான உடனடி தீர்வினை எதிர்பாக்கின்றனர் செம்மண்னோடை மக்கள் முள்ளிநியூஸ்

(வீடியோ).,இது யாருடைய குற்றம்.? இதற்கான உடனடி தீர்வினை எதிர்பாக்கின்றனர் செம்மண்னோடை மக்கள்


வாழைச்சேனை ,செம்மண்னோடை சாட்டோ விளையாட்டு மைதான வீதியில் அமைந்துள்ள இரண்டு மீற்றர் நீளமான வடிகானுக்கு மேலால் கணரக வாகனம் ஒன்று நேற்று 04.02.2016 சக்கை கற்களை ஏற்றி வந்தமையினால் வடிகானாது முற்றிலும் சேதமுறு இடிந்து விழுந்த நிலையில் குறித்த வீதியினூடான போக்குவரத்திற்கு முற்றிலும் தடை ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனை வடிகான் அமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட குறித்த அகலமான வடிகான் விடயத்தில் கொந்துராத்துக்காரர்களின் பிழைகள் ஏதும் இல்லை என சுட்டிக்காட்டும் பிரதேச மக்கள் இன்னும் உறுதியான முறையில் குறித்தவடிகானினை அமைத்திருக்க முடியும் என தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். குறித்த வடிகான் அமைந்துள்ள வீதியில் பொது விளையாட்டு மைதானமும், பெண்களுக்கான வைத்திய பரிசோதனை நிலையமும் காணப்படுவதினால் சன நடமாட்டமும், சிறுவர்களின் போக்குவரத்திற்கு கூடுதலாக பாவிக்கப்படும் வீதியாகவும் குறித்த வீதி காணப்படுகின்றது.

ஆகவே மக்களின் அன்றாட போகுவரத்துக்களை கருத்தில் கொண்டும், மைதானத்திற்கு விளையாட வருகின்ற மற்றும் பாடசாலைகளுக்கு செல்கின்ற சிறுவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், மதஸ்தானங்களுக்கு செல்கின்றவர்களினதும், வியாபாரிகளின் தேவைகளை கருத்தில் கொண்டும் உடனடியாக முற்றாக சேதமைந்து காணப்படுகின்ற குறித்த வடிகானுக்கான மூடியினை செப்பனிட்டு தருமாறு பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் பிரதேசத்து அரசியல் வாதிகளை வேண்டி நிற்கின்ற பொதுமக்கள் கணரக வாகனங்கள் குறித்த வீதியில் செல்வதற்கு தடை விதிக்கும் வகையில் குறித்த வீதியில் பெயர் பலகை இட்டு தருமாறும் தங்களது கருத்துகளை உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர்.
வீடியோ இது யாருடைய குற்றம்.?:- www.youtube.com/watch?v=TYQSeQWKprk&feature=youtu.be

(இஹ்ஸானா- பரீத்)

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW