சிரியாவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி முள்ளிநியூஸ்

சிரியாவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி

Photo published for சிரியாவில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி - Newsfirst

சிரியாவின் தலைநகரான (Damascus) டமஸ்கஸ் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரட்டைக் குண்டுத் தாக்குதலினால் 120 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரிய அரச படையின் கட்டுப்பாட்டில் கீழ் இருந்த டமஸ்கஸ் பகுதியில் இடம்பெற்ற குறித்த குண்டு வெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனிதப் பயணம் மேற்கொண்ட ஷியா பிரிவினரைக் குறி வைத்து குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதில் உயிரிழந்தவர்களில் பலர் ஈராக் நாட்டைச் சேர்ந்த புனித யாத்திரிகர்கள் எனவும் சிரிய நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW