பதினேழு வயதுடைய சிறுமியின் கையை பிடித்திழுத்தவர் விளக்கமறியலில்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வல்லுறவு ரீதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரின் கையைப்பிடித்திழுத்த நபர் ஒருவரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ஏ.எம்.முஹீத் நேற்று(11) உத்தரவிட்டார்.
திருகோணமலை, சுமேதங்கரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பதினேழு வயதுடைய சிறுமியை ஒரு தலைக் காதலாக கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்த நிலையிலேயே சிறுமியின் வீட்டுக்குச் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் ரீதியில் கையைப்பிடித்திழுத்ததாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை (11) அதிகாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.