டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை துரிதமாக்க நடவடிக்கை முள்ளிநியூஸ்

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை துரிதமாக்க நடவடிக்கை



டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை துரிதமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கவுள்ள மழையுடனான காலத்திற்கு முன்னதாக நாடு தழுவிய ரீதியில் நுளம்புகள் பெருகும் இடங்களை துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு ஒழிப்புத் துறை சார் உதவியாளர்கள் 500 பேர் இன்று முதல் இதற்கென சேவையிலிணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 16,479 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW