கிண்ணியாவில் 55 டைனமைட் வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது முள்ளிநியூஸ்

கிண்ணியாவில் 55 டைனமைட் வெடி மருந்துகளுடன் ஒருவர் கைது


திருகோணமலை மாவட்ட பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிண்ணியா பகுதியில் டைனமைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பைசல் நகர் கிண்ணியா முன்றாம் வட்டாரத்தில் 55 டைனமைட் குச்சிகளை விற்பனைக்காக முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற அப்துல்லா முகமது ரபீக் வயது-45 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகளையும் திருகோணமலை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 38500 ரூபா எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW