டிப்பர் – முச்சக்கர வண்டி மோதல்; மூவர் பலி!

அம்பலந்தொட்ட லுனம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அம்பலங்கொடயிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குழுவொன்றே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.