கந்தளாய் அல் நஜாஹ் அரபுக் கல்லூரிக்கு மற்றும் பாடசாலைக்கு செல்லும் உள்வீதியில் கல்வெட்டு - Dr.அருண சிறிசேன (MPC)

நல்லாட்சி அரசின் "ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை " எனும் வேலைத்திட்டதின்கீழ் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பேராறு யுனிட் 1 கிராம பிரிவிற்கான அல் நஜாஹ் அரபுக்கல்லூரிக்கு மற்றும் பாடசாலைக்கு செல்லும் உள்வீதி யில் நீர் வடிவதற்கான கல்வெட்டு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இவ் வேலைத் திட்டத்திற்கான இடங்களை (27) செவ்வாய் கிழமை பார்வையிட்டு இதற்கான வேலையினையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதி பிரதான அமைப்பாளரும் கந்தளாய் பிரதேச அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான டொக்டர் அருண சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வீதியில் மழை காலத்தில் அதிகமான நீர் தேங்கி நிற்பதால் பாடசாலை மற்றும் பள்ளிவாசல் செல்வது மிக சிரமமாக உள்ளது.
இவ்வேலையானது கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சல்மான் பாரிஸ், காதர் அவர்களின் வேண்டுதளுக்கிணங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வேலைக்கான நிதியாக ரூ 5 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சத்தார் , செயலாளர் எம்.ஐ.எம். பைரூஸ் மற்றும் பிரதேச மக்கள் சிலரும் கலந்துகொண்டனர்கள் .
Mullinews Team:-
இஹ்ஸானா பரீத்
சல்மான் பாரீஸ்


