கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்தி வைப்பு. முள்ளிநியூஸ்

கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்தி வைப்பு.


கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.

அமைச்சாரவைப் பத்திரத்தில் மாற்றம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளதாக

தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம். அனீஸ் (ஜே.பி) தெரிவித்தார்.

இதன் பிரகாரம் எற்கனவே அறிவித்திருந்த இம்மாதம் 13,14,15ம் திகதிகளில் நேர்முகப் பரீட்சை நடைபெற மாட்டாது என்றும் கூறியுள்ளார்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகப் பரீட்சைகளை குறிப்பிட்ட திகதியில் மூன்று தினங்கள் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தகவல்:-ஏ.எஸ்.எம். அனீஸ் (ஜே.பி)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW