மக்கா தாக்குதல் முயற்சி; முஸ்லிம் நாடுகள் கண்டனம்! முள்ளிநியூஸ்

மக்கா தாக்குதல் முயற்சி; முஸ்லிம் நாடுகள் கண்டனம்!


மக்காவில் நேற்றிரவு சவுதி பொலிசாரின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டிருந்த தாக்குதல் முயற்சியையடுத்து முஸ்லிம் நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பாகிஸ்தான் உலமா கவுன்சில், முஸ்லிம் நாடுகளின் கூட்டுறவுகளுக்கான அமைப்பு, முஸ்லிம் லீக் போன்ற அமைப்புகளும் குறித்த சம்பவத்துக்குக் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாராக இருந்த நபர் சுற்றி வளைக்கப்பட்டதன் பின்னணியில் துப்பாக்கிப் பிரயோகமும் குறித்த நபர் குண்டை வெடிக்க வைத்ததன் பின்னணியில் கட்டிடம் ஒன்று சேதமடைந்திருந்த நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கா மற்றும் ஜித்தாவில் மூன்று இடங்களில் தீவிரவாதிகள் ஒளிந்திருந்ததாகவும் சவுதி பொலிசார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW