யதார்த்தமில்லாத ‘நிபந்தனைகள்’: கட்டார் பதில்! முள்ளிநியூஸ்

யதார்த்தமில்லாத ‘நிபந்தனைகள்’: கட்டார் பதில்!



சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் குவைத் ஊடாக முன் வைத்திருக்கும் நிபந்தனைகள் யதார்த்தமில்லாதவை என தெரிவித்துள்ள கட்டார் அவற்றை மீளாய்வு செய்யும்படி பதிலளித்துள்ளது.

கட்டாருடனான ராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொண்டதன் பின் குவைத்தினால் முன்னெடுக்கப்படும் சமரச முயற்சிகளின் பின்னணியில் தமது தரப்பிலிருந்து 13 அம்ச நிபநத்தனைகள் அடங்கிய கோரிக்கையை சவுதி தரப்பு முன் வைத்திருந்தது.

முக்கியமாக அல்ஜசீரா தொலைக்காட்சியை மூடுதல் மற்றும் கட்டாரில் இயங்கும் அமெரிக்க இராணுவ தளத்தை அண்மித்துள்ள துருக்கியின் இராணுவ தளத்தை மூட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் அதனை நிராகரித்துள்ள கட்டார், யதார்த்தமில்லாத நிபந்தனைகளை மீளாய்வு செய்யுமாறு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW