தாயின் தகாத நடவடிக்கை.. பிள்ளைகள் மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல். முள்ளிநியூஸ்

தாயின் தகாத நடவடிக்கை.. பிள்ளைகள் மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல்.

கொட்டதெனியாவ, ஹெலகம, கிதுல்வல பிரதேசத்தில் ஒரு குடும்பத்தின் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது ஒரு 06 வயதுடைய ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவத்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்துள்ள தாயும் ஏனைய பிள்ளையும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகாத உறவின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், சந்தெகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

​கொட்டதெனியாவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW