ஒலுவில் மோட்டார்சைக்கிள் விபத்து; 18 வயது இளைஞன் பலி முள்ளிநியூஸ்

ஒலுவில் மோட்டார்சைக்கிள் விபத்து; 18 வயது இளைஞன் பலி


ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள், உளவு இயந்திரத்திர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் அரிசி ஆலையொன்றில் வேலை செய்து வந்த வாழைச்சேனையசை் சோ்ந்த ஆர். இந்திரன் (18) என்பவரே இவ்விபத்தினால் உயிரிழந்துள்ளளர்.

நேற்று (29) இரவு 7.00 மணியளவில், ஒலுவில் பிரதான வீதியிலிருந்து வெளிச்ச வீடு வீதியாக சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும், பிராதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தினால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞன் உணர்வற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தினால் மோட்டார் சைக்கிள் கடுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன் உழவு இயந்திரத்தின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி ஜமால்தீன் றியாஸ் (28) என்பவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


ரி.கே. ரஹ்மதுல்லாஹ்




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW