ஏவுகணை சோதனை; போர் விமானங்கனை அனுப்பிய அமெரிக்கா
வடகொரியாவின் நேற்றைய ஏவுகணை சோதனையை அடுத்து கொரிய வான் பரப்புக்கு போர் விமானங்களை அனுப்பித் தமது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளது அமெரிக்கா.
நேற்றைய சோதனை, அமெரிக்காவின் எப்பகுதியையும் தாக்கக்கூடிய வல்லமையைத் தாம் பெற்றிருப்பதை நிரூபித்திருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனா இவ்விவகாரத்தில் போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா போர் விமானங்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.