முள்ளிப்பொத்தானை புஹாரி ஜும் ஆ பள்ளி வாயலுக்கு பின் உள்ள மையவாடி வடிகான் அகழ்வு-Dr.அருண சிறிசேன

திருகோணமலை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜும் ஆ பள்ளி வாயலுக்கு பின் உள்ள மையவாடி குறுக்கே செல்லும் வடிகானை நேர் படுத்தி அகழ்வு பணிகள் ஆரம்பம்
ஈச்ச நகர் மையவாடி வடிகான் பல சதாப்த்த காலமாக புனரமைக்கப் படாமல் இருந்ததை அடுத்து புஹாரி பள்ளி வாசல் தலைவர் நவாஸ் ஹாஜி,உபதலைவர் மௌலவி ஐயூப்கான் ஹாஜி, செயளாலர் அரபாத் மற்றும் டாக்டர் அருண சிறிசேன அவர்களின் அமைப்பாளர் றியால்தீன் ஆகியோர் வேண்டுகோளுக்கு இணங்கவாக இதனை இன்று (31) திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சி சேருவெல தொகுதியின் பிரதான அமைப்பாளர் டாக்டர்,அருண சிறிசேன அவர்களாகவே முன் வந்து 400 மீற்றர் தூரம் வடிகான் அகழ்வும் மற்றும் ஈச்ச நகர் மதினா வித்தியாலயத்தின் முன் உள்ள 100 மீற்றர் படிகான் அகழ்வும் ஒரே தடவையில் செய்துள்ளார்
இந்த வடிகான்களுக்கான கட்டுமான பணிகளையும் குறுகிய காலப் பகுதிக்குள் செய்து தருவதாகவும் மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.
தற்போது பெய்யும் மழையினால் தங்களின் உதவியால் தோன்ற பட்ட வடிகான் மூலமாக நீர் வடிந்தோடுவதை பார்க்கும் மனங்கள் மகிழ்ச்சியில் ஈச்ச நகர் வாழ் மக்கள் நன்றியை தெறிவித்து கொள்கின்றனர்.







