மீண்டும் ஏவுகணை சோதனை; அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை!
புதிய ரக கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ள வடகொரியா, அமெரிக்காவின் எப்பகுதியையும் தாக்கும் வல்லமையைத் தாம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
3724 கி.மீ உயரத்தில் 47 நிமிடங்கள் பறந்த Hwasong-14 ஏவுகணை,அமெரிக்காவின் எப்பகுதியையும் சென்றடையக் கூடியது என வடகொரியா தெரிவித்துள்ள அதேவேளை, வழக்கம் போல வடகொரியாவுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என சீனா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.