ஓவியாவுக்கு வலைவிரிக்கும் சிம்பு! சிக்குவாரா? முள்ளிநியூஸ்

ஓவியாவுக்கு வலைவிரிக்கும் சிம்பு! சிக்குவாரா?



அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலமும், பாடல்கள் மூலமும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் வெளியான இவரின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படமும் பெண்களை இழிவுபடுத்தும் பிற்போக்குத் தன்மை வாய்ந்த படமாக இருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இப்படி ஒருபக்கமிருந்தாலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மௌனவிரதம் இருந்தது போல அவ்வப்போது சமூகப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துவருபவர் சிம்பு.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு ஆதரவளித்து அன்பை பரப்புவோம் என்ற ஹேஷ்டேக்கில், ஒருவர் மற்றவர்களிலிருந்து வேறுபட்டிருந்தால் அவரைப் பற்றி குறை கூறுவதையும், கார்னர் செய்வதையும் விட்டுவிட்டு அவரை அவர்போக்கில் விடுவது நல்லது என்று ஓவியாவிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW