அரச ஊழியர்களை பராமரிக்க வருடாந்தம் 1.4 ட்ரில்லியன் ரூபா செலவு.... முள்ளிநியூஸ்

அரச ஊழியர்களை பராமரிக்க வருடாந்தம் 1.4 ட்ரில்லியன் ரூபா செலவு....




17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 ட்ரில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில், அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 அதன்படி, நாட்டில் 17 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளதாகவும், நாட்டின் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் 76 வீதம் இந்த 17 இலட்சம் பேரை பராமரிப்பதற்கே செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

 அதன்படி, குறித்த வீதமானது ஒரு வருடத்திற்கு 104 ட்ரில்லியன் ரூபா என்றும், இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை என்பன கடந்த நான்கு வருடங்களில் 1350 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

 இந்த பணத்தை சேமித்திருந்தால் 12 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனவும், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 178,000 ரூபாவை சேமித்திருப்பார்கள் எனவும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW