துப்பாக்கிச் சூடு - 5 ஆசிரியர்கள் உயிரிழப்பு......
துப்பாக்கிச் சூட்டில் 5 ஆசிரியர்கள் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 ஆசிரியர்கள் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
பாடசாலை முடிந்து ஆசிரியர்கள் பரீட்சை தாள்களை தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் பாடசாலைக்குள் நுழைந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன, மதக் குழப்பம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பல துப்பாக்கி சுடும் வீரர்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் ஓய்வறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் கொலைச் சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
