கனவுகளை தேடி வாழ்க்கையை தொலைத்த 170 பணிப்பெண்கள்
கடவுச்சீட்டு, வீசா போன்றவற்றை மோசடி செய்து கடத்தல்காரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் பாதிக்கப்பட்ட 170 பெண்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குழுவொன்று சட்டத்தின் முன் வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சட்டத்தை மீறி மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்ட பலருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
கடந்த காலங்களில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தேவையான பயிற்சி, தொழில்நுட்ப அறிவு மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யாமல் பல்வேறு மோசடி முறைகளைப் பயன்படுத்தி தகுதியற்ற பணியாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வந்தன.
போலியான தகவல்களை வழங்கி, பண மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்து வேலைக்கு தகுதியில்லாதவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சி, கடவுச்சீட்டு, வீசா போன்றவற்றை மோசடி செய்து கடத்தல்காரர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
