கனடாவின் பிரகடனம் - இலங்கை இராணுவத்திற்கு ஆபத்து ; வெளியான எச்சரிக்கை! முள்ளிநியூஸ்

கனடாவின் பிரகடனம் - இலங்கை இராணுவத்திற்கு ஆபத்து ; வெளியான எச்சரிக்கை!


கனடாவின் பிரகடனம் - இலங்கை இராணுவத்திற்கு ஆபத்து ; வெளியான எச்சரிக்கை!


இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா வெளியிட்ட பிரகடனத்தை ஏனைய நாடுகளும் அங்கீகரிகக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதியின் தலைமையில் இடம்பெற்ற தேசிய பார்வை தொடர்பான கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கனடா அரசியல் ரீதியாக தெரிவித்த பொய்யை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். 

நான் தனிநபர் பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன், ஆதாரங்கள் இல்லாத யுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கனடா பயணத்தடை விதித்துள்ளது. கனடா விதித்துள்ள இந்த பயணத்தடைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினருக்கு கடும் பாதிப்புக்கள் ஏற்படும்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சவாலுக்கு உட்படுத்தாமல் தொடர அனுமதித்தால் அது தனிநாடு தொடர்பான கோரிக்கைகளை நியாயப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும்." என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW