இரத்த அழுத்தத்தை சீராக்கும்! உடல் சூட்டை தணிக்கும்... சீரகத் தண்ணீர் அற்புதங்கள்
கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில் பலரும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் தண்ணீரை அல்லது மண்பானைத் தண்ணீரை பருகி, தாகத்தை போக்கிக் கொள்கிறோம்.
ஆனால் வெதுவெதுப்பான சீரகத் தண்ணீரை பருகி, கோடைக்காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியை கொண்டுவர முடியும்.
காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
கல்லீரல் செயற்பாட்டிற்கு சீரக தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
எனவே உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் சீரக தண்ணீரை குடிக்கலாம்.
குடல் பிரச்னை உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்
முக்கிய குறிப்பு:
சிறுநீரகப் பிரச்னை, சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளவர்கள், சீரகத் தண்ணீரை பருகக் கூடாது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
