அத்தியாவசியப் பொருளாகும் கோதுமை மா வெளியான வர்த்தமானி முள்ளிநியூஸ்

அத்தியாவசியப் பொருளாகும் கோதுமை மா வெளியான வர்த்தமானி

அத்தியாவசியப் பொருளாகும் கோதுமை மா வெளியான வர்த்தமானி


கோதுமை மாவினை அத்தியாவசியப் பொருளாக அறிவித்த வர்த்தமானி அறிவித்தல் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது 

சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் படி கோதுமை மா கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அத்தியாவசியப் பொருளாக வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது கோதுமை மா இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருள் பட்டியலில் இருந்து பெட்ரோலிய வாயுவை அகற்றும் வர்த்தமானி அறிவித்தலை அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW