காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள் முள்ளிநியூஸ்

காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள்

காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள்

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். 

 இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் தெரிவிக்கையில்;

 “இந்த நெருக்கடியான நிலைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அனுப்பி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

 இல்லையெனில் நாங்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும். இங்கே 55 குழந்தைகள் உள்ளனர். 

ஒருவேளை மின்சாரம் இல்லாமல் போனால் மின்சார உதவி தேவைப்படும். குழந்தைகளை அடுத்த 5 நிமிடங்களில் இழந்து விடுவோம்” மருத்துவமனைகளில் எரிபொருள் மிகவும் குறைவாக, அபாய கட்டத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

 இந்த மருத்துவமனையில் மட்டும் சுமார் 60,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW