அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் அரச வேலைக்கு உள்வாங்கப்படாத பட்டதாரிகள் போராட்டம்

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்தார்.
“பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட 60,000 பட்டதாரிகளுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தில் அரச அதிகாரிகளினால் விடபட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகளினால் 465 பட்டதாரிகள் வேலையிழந்து பல வருடங்கள்
கடந்துள்ளன.
இது தொடர்பில் தான் தொடர்ந்து பாராளுமன்றத்திலும், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களிலும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கும் தெரியப்படுத்தினேன்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரும் இந்த பிரச்சினையை முடிவுக்கொண்டு வருவதாக அறிவித்துள்ள போதிலும், இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.
ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இன்று இந்த பட்டதாரிகள் வேலை இழந்துள்ளனர்.
பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது கீழ்த்தரமானதும் நியாயமற்றதுமான செயலாகும். இதன் காரணமாக அவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்று பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். நாளை மீண்டும் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றிற்கு அறியப்படுத்துவேன்.” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW