கணினியில் வேலை பார்த்து கை மரத்து விட்டதா! கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க

அதிலும் கனிணியில் வேலை செய்யும் மக்கள் அதன் முன்பு இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் கை வலி, கண் வலி மற்றும் முதுகு வலி போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
சில சமயங்களில் கையை கூட நகர்த்தாமல் வேலை பார்க்க வேண்டியிருக்கும். இதற்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.

கார்பன் டன்னல் சிண்ட்ரோம்
கார்பன் டன்னல் சிண்ட்ரோம் என்பது பொதுவாக கைகளில் ஏற்படும் நிலையாகும்.
வேலை பார்க்கும் போது கை மற்றும் மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இதில் கார்பல் டன்னல் என்பது கையின் உள்ளங்கையில் எலும்புகள் மற்றும் தசைநார்கள் மூலம் சூழப்பட்ட ஒரு குறுகிய பாதையாகும்.
இந்த நரம்புகளில் அழுத்தங்கள் ஏற்படும் போது உணர்வின்மை, கூச்ச உணர்வு, கைவலி மற்றும் கைகளில் பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
டி குவெர்வின் டெனோசினோவிடிஸ்
இது ஒரு வலி மிகுந்த நிலையாகும். இது கட்டை விரல் மற்றும் மணிக்கட்டு பகுதியை அதிகமாக பாதிக்கிறது.
டி குவெர்வின் டெனோசினோவிடிஸ் என்பது மணிக்கட்டின் கட்டைவிரலின் பக்கவாட்டில் இயங்கும் மற்றும் கட்டைவிரலின் அடிப்பகுதியில் இருக்கும் பகுதியாகும்.
இந்த பகுதியில் உள்ள தசைநார்களில் வீக்கம் ஏற்படும் போது பிரச்சினை ஏற்படுகிறது.
இது வலி மற்றும் உணர்வின்மை பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
இதனால் உங்கள் கைகளை எளிதாக நீங்கள் அசைக்க முடியாது.
இதனால் கட்டை விரலின் அடிப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட வாய்ப்புள்ளது...

லேப்டாப் மற்றும் கணினியால் ஏற்படும் கை பாதிப்பை எப்படி தடுக்கலாம்?
- தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் கைகளுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்கள் கைகளை நன்றாக நீட்டி ஓய்வெடுங்கள்.
- கை மற்றும் மணிக்கட்டு வலியை தடுக்க உங்கள் வேலைச் சூழலை நீங்கள் சரியான முறையில் அமைக்க வேண்டும்.
- நீங்கள் வேலை பார்க்கும் கணினியின் கீபோர்டை முழங்கை உயரத்திற்கு வைக்க வேண்டும்.
- அதே மாதிரி வேலை பார்க்கும் போது உங்கள் மணிக்கட்டை நேராகவும் தளர்வாகவும் செளகரியம் வாய்ந்ததாக வைக்க வேண்டும்.
- உங்கள் தலை மற்றும் முதுகை நேராக நிமிர்ந்து நிலையில் வைத்து உட்கார வேண்டும்.
- உங்கள் உடலில் இருந்து கணிணியின் திரையை 20 அங்குலங்கள் தொலைவில் வைக்க வேண்டும்.
- உங்கள் கண் மட்டத்திற்கும் லேப்டாப் திரை சரியான அளவில் இருக்க வேண்டும்.
- எளிய மணிக்கட்டு உடற்பயிற்சிகள் கைகளில் உள்ள வலியை போக்க உதவுகிறது.
- முதலில் உங்கள் கைகள் மற்றும் மணிக்கட்டுகளை லேசாக அசைத்துக் கொள்ளுங்கள்.
- ஸ்பான்ஞ் வகை பந்தை கொண்டு கைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம்.
- களிமண்ணுடன் விளையாடுதல் போன்ற பயிற்சிகள் உங்கள் கைகளுக்கு நல்ல வலிமையை தரும்.