ராஜித சொல்வதை நம்ப விரும்புகிறவர்கள் நம்பலாம்: விஜேதாச (video) முள்ளிநியூஸ்

ராஜித சொல்வதை நம்ப விரும்புகிறவர்கள் நம்பலாம்: விஜேதாச (video)


இலங்கையில் இனவாத முறுகல் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றில் கருத்துரைத்த நீதியமைச்சர் அதன் போது 32 முஸ்லிம்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்த கருத்தினை அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்திருந்தமை தொடர்பில் வினவப்பட்ட போது அவரை நம்புபவர்கள் நம்பலாம் என பதிலளித்துள்ளார் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.

அத தெரன தொலைக்காட்சியுடனான நேர்காணல் ஒன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அமைச்சர், தான் தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தெரிவித்திருந்ததாகவும் தனது பாராளுமன்ற உரையிலேயே தான் தெரிவித்ததாகவும் அது அரசின் நிலைப்பாடு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதில் யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ‘அறிவு’ மக்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் ராஜபக்ச குடும்பம் தமது ஊர்க்காரர்கள் என்பதால் அந்த வரையறையுடனேயே தமது ‘உறவு’ இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW