வெல்லாவௌியில் யானை தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு முள்ளிநியூஸ்

வெல்லாவௌியில் யானை தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு


மட்டக்களப்பு – வெல்லாவௌி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

38 ஆம் கொலனி பகுதியைச் சேர்ந்த நபர் காணாமற்போனதையடுத்து, அவரை தேடிச்சென்ற போதே நேற்று (28) அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

யானை தாக்குதலுக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

5 பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW