அலகுகளின் அளவிற்கேற்ப நீர் கட்டணஉயர்வு -முழுவிபரம் முள்ளிநியூஸ்

அலகுகளின் அளவிற்கேற்ப நீர் கட்டணஉயர்வு -முழுவிபரம்

அலகுகளின் அளவிற்கேற்ப நீர் கட்டணஉயர்வு -முழுவிபரம்

இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் பெருந்தோட்ட வீடுகளுக்கான நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை.
 
ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுப் பாவனைக்கான நீரின் முதல் 5 அலகுகளுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 இந்த கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், பூங்கா நீர் குழாய்கள், அரசாங்க பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், 

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை சிறப்பு அம்சமாகும். ஒரு அலகிற்கு அறவிடப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 
0 - 5 ஒரு அலகு 60 ரூபா மாத கட்டணம் 300 ரூபா 
 6 -10 ஒரு அலகு 80 ரூபா மாத கட்டணம் 300 ரூபா 
 11 -15 ஒரு அலகு 100 ரூபா மாத கட்டணம் 300 ரூபா 
 16 - 20 ஒரு அலகு 110 ரூபா மாத கட்டணம் 400 ரூபா 
 21 - 25 ஒரு அலகு 130 ரூபா மாத கட்டணம் 500 ரூபா
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW